ரிஷிவந்தியம் தொகுதியில் ஆவணம் இன்றி எடுத்துச் சென்ற ரூ.2 லட்சம் பறிமுதல்


ரிஷிவந்தியம் தொகுதியில் ஆவணம் இன்றி எடுத்துச் சென்ற ரூ.2 லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 29 March 2021 4:53 PM GMT (Updated: 29 March 2021 4:53 PM GMT)

ரிஷிவந்தியம் தொகுதியில் ஆவணம் இன்றி எடுத்துச் சென்ற ரூ.2 லட்சம் பறிமுதல்

ரிஷிவந்தியம்

ரிஷிவந்தியம் தொகுதிக்குட்பட்ட மாடாம்பூண்டி கூட்டு ரோட்டில் பறக்கும் படை அலுவலர் ரோச்சல் கலைச்செல்வி தலைமையிலான குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோத அதில் நாமக்கல் பகுதியைச் சேர்ந்த மவுலீஸ்வரன் என்பவர் ரூ.52 ஆயிரமும், யுகபாரதி என்பவர் ரூ.52 ஆயிரமும் வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். ஆனால் உரிய ஆவணம் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பாண்டியனிடம் ஒப்படைத்தனர்.  அதேபோல் மணலூர்பேட்டை பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த நிலை கண்காணிப்புக்குழு அலுவலர் மோகன் தலைமையிலான குழுவினர் அந்தவழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வந்த தேவரடியார் குப்பத்தைச் சேர்ந்த சிவராஜன் உரிய ஆவணம் இன்றி எடுத்து வந்த ரூ.1 லட்சத்தை பறிமுதல் செய்து உதவி தேர்தல் அலுவலர் பாண்டியனிடம் ஒப்படைத்தனர்.Next Story