பொதுமக்களுக்கு உணவு பரிமாறி அ.தி.மு.க. வேட்பாளர் முத்துக்குமார் வாக்கு சேகரிப்பு


பொதுமக்களுக்கு உணவு பரிமாறி அ.தி.மு.க. வேட்பாளர் முத்துக்குமார் வாக்கு சேகரிப்பு
x
தினத்தந்தி 31 March 2021 9:08 AM IST (Updated: 31 March 2021 9:08 AM IST)
t-max-icont-min-icon

சேங்கல் சந்தைக்கு சென்று காய்கறி வியாபாரிகளிடம் அ.தி.மு.க. வேட்பாளர் முத்துக்குமார் இருகரம் கூப்பி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.

கரூர், 

கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் முத்துக்குமார் நேற்று சேங்கல், முனையனூர், ரெங்கநாதபுரம், பாலராஜபுரம் ஆகிய ஊராட்சிகளில் பொதுமக்களிடம் நேரில் சென்று பாதம் தொட்டு இரட்டை இலைக்கு வாக்களிக்குமாறு தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். தொடர்ந்து சேங்கல் சந்தைக்கு சென்று காய்கறி வியாபாரிகளிடம் இருகரம் கூப்பி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். பின்னர் அங்குள்ள ஒரு ஓட்டலுக்கு சென்ற அவர் அங்கிருந்த பொதுமக்களுக்கு உணவு பரிமாறி வாக்குகள் சேகரித்தார். 

பிரசாரத்தின்போது அவர் கூறுகையில், தான் வெற்றி பெற்றவுடன் இந்த பகுதியில் குடிநீர் பிரச்சினை, சாலை வசதி அனைத்தும் செயல்படுத்தப்படும். கடந்த சில நாட்களுக்கு முன்பு மேலடை பகுதியில் குடிதண்ணீர் பிரச்சினை என்று பொதுமக்கள் என்னிடம் கோரிக்கை வைத்தீர்கள். 

அப்போது உடனடி நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொண்டு குடிநீர் குழாயை சரி செய்து, தற்போது சீரான முறையில் இந்த பகுதிக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் போனில் கோரிக்கை வைத்த உடனேயே அதை நிவர்த்தி செய்து உள்ளேன். எனவே எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்யுமாறு வேண்டுகிறேன் என்றார்.

Next Story