வடகாடு, ஆலங்குடியில் ரூ.2½ லட்சம் பறிமுதல்


வடகாடு, ஆலங்குடியில் ரூ.2½ லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 31 March 2021 6:32 PM GMT (Updated: 31 March 2021 6:32 PM GMT)

வடகாடு, ஆலங்குடியில் ரூ.2½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

வடகாடு, ஏப்.1-
வடகாடு அருகே கே. ராசியமங்கலம் ஆர்ச் பகுதியில் தேர்தல் கண்காணிப்பு குழு தலைவர் சக்தி தலைமையிலான பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது, கருங்காகுறிச்சியை சேர்ந்த பிரேம் (வயது 34) என்பவர் ரூ.1 லட்சத்து 35 ஆயிரம் கொண்டுவந்தார். ஆனால் அந்த பணத்துக்கு உரிய ஆவணம் இல்லாததால் பறக்கும் படையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். இதேபோல் ஆலங்குடி அருகே ராஜேந்திரபுரத்தில் நிலையான கண்காணிப்புக்குழு அதிகாரி சக்தி தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை நடத்தியபோது, அறந்தாங்கியைச் சேர்ந்த அலாவுதீன் என்பவர் ரூ.ஒரு லட்சத்து 18 ஆயிரம் எடுத்து சென்றார். அந்த பணத்துக்கு உரிய ஆவணம் இல்லாததால் அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பணம் ஆலங்குடி தேர்தல் நடத்தும் அலுவலர் அக்பர் அலி மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பொன்மலர் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது.


Next Story