அ.தி.மு.க.பிரமுகர் வீட்டில் நகை-பணம் திருட்டு


அ.தி.மு.க.பிரமுகர் வீட்டில் நகை-பணம் திருட்டு
x
தினத்தந்தி 31 March 2021 7:27 PM GMT (Updated: 31 March 2021 7:27 PM GMT)

அ.தி.மு.க.பிரமுகர் வீட்டில் நகை-பணம் திருட்டு போனது.

வேப்பந்தட்டை
வேப்பந்தட்டையை அடுத்துள்ள அரும்பாவூரை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 50). பேரூராட்சி 7-வது வார்டு முன்னாள் உறுப்பினர். அ.தி.மு.க. பிரமுகரான இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் வெளியூர் சென்று இருந்தார். நேற்று காலை வீடு திரும்பியபோது கதவில் பூட்டப்பட்டிருந்த பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அங்கு வைக்கப்பட்டிருந்த ரூ.25 ஆயிரம் மற்றும் ஒரு பவுன் தோடு, வெள்ளி கொலுசுகள் ஆகியவை திருட்டு போயிருந்தன. அதோடு வீட்டிற்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிகளும் மர்ம நபர்களால் உடைக்கப்பட்டு கிடந்தது. இதுகுறித்து அரும்பாவூர் போலீசில் செந்தில்குமார் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story