முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் திருவிழா


முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் திருவிழா
x
தினத்தந்தி 1 April 2021 2:12 AM IST (Updated: 1 April 2021 2:12 AM IST)
t-max-icont-min-icon

அருப்புக்கோட்டை முத்து மாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா நடைபெற்றது.

அருப்புக்கோட்டை, 
அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின் முறைக்கு டிரஸ்டுக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விரதம் இருந்த பக்தர்கள் அக்கினிச்சட்டி ஏந்தி நேற்று நேர்த்தி கடனை செலுத்தினர். விழாவிற்கான ஏற்பாடுகளை நாடார்கள் உறவின்முறை தலைவர் சுதாகர் தலைமையில் ட்ரஸ்ட் நிர்வாகிகள் செய்திருந்தனர். துணை போலீஸ் சூப்பிரண்டு சகாய ஜோஸ் தலைமையில் டவுன் இன்ஸ்பெக்டர் வசந்தி, குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜபுஷ்பா, சப்-இன்ஸ்பெக்டர்கள் கருப்புசாமி, நாகராஜ் பிரபு மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story