தன்னிறைவு பெற்ற தொகுதியாக பெரியகுளத்தை மாற்ற பாடுபடுவேன் அ.தி.மு.க. வேட்பாளர் எம்.முருகன் பிரசாரம்


தன்னிறைவு பெற்ற தொகுதியாக பெரியகுளத்தை மாற்ற பாடுபடுவேன் அ.தி.மு.க. வேட்பாளர் எம்.முருகன் பிரசாரம்
x
தினத்தந்தி 1 April 2021 10:43 AM IST (Updated: 1 April 2021 10:43 AM IST)
t-max-icont-min-icon

தன்னிறைவு பெற்ற தொகுதியாக பெரியகுளத்தை மாற்ற பாடுபடுவேன் என்று அ.தி.மு.க. வேட்பாளர் எம்.முருகன் தெரிவித்தார்.

தேனி, 

பெரியகுளம் (தனி) சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக எம்.முருகன் போட்டியிடுகிறார். அவர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கிராமம், கிராமமாக சென்றும், நகர்புற பகுதிகளில் வீதி, வீதியாக சென்றும் வாக்குசேகரித்து வருகிறார். அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் அவருக்கு ஆதரவு திரட்டி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அ.தி.மு.க. வேட்பாளர் எம்.முருகன் நேற்று பெரியகுளம் கீழவடகரை, பெருமாள்புரம், தெய்வேந்திரபுரம், ஸ்டேட் வங்கி காலனி உள்ளிட்ட இடங்களில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரசாரத்தின் போது அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் அ.தி.மு.க. நல்லாட்சி நடத்தி வருகிறது. அந்த நல்லாட்சி தொடர அனைவரும் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் ஏழை, எளிய மக்களுக்கான பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன. ஏழை, எளிய மக்களுக்கு விலையில்லா வாஷிங் மெஷின் வழங்கப்படும். திருமண நிதிஉதவி மற்றும் முதியோர் உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும். இல்லத்தரசிகளுக்கு மாதம்  ரூ.1, 500 அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் நான் வெற்றி பெற்றால், மக்களுக்கான அடிப்படை வசதிகளை தனிக்கவனத்துடன் நிறைவேற்றிக் கொடுப்பேன். தன்னிறைவு பெற்ற தொகுதியாக பெரியகுளம் சட்டமன்ற தொகுதியை மாற்றுவேன். இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்க தனிக்கவனம் செலுத்துவேன். நீர்நிலைகள் சீரான இடைவெளியில் தூர்வாரப்பட்டு விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்கு தட்டுப்பாடு இன்றி தண்ணீர் கிடைக்க வழிவகை செய்வேன். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பிரசாரத்தில் அ.தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்லமுத்து, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் ராஜபாண்டியன் மற்றும் அ.தி.மு.க., கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். அதுபோல், தேனி நகராட்சி பகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளர் முருகனுக்கு வாக்குகேட்டு அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் வீடு, வீடாக சென்று வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர்.

Next Story