அண்ணாமலைக்கு கனிமொழி எம்.பி. எச்சரிக்கை


அண்ணாமலைக்கு கனிமொழி எம்.பி. எச்சரிக்கை
x
தினத்தந்தி 1 April 2021 5:29 PM GMT (Updated: 1 April 2021 5:29 PM GMT)

“தி.மு.க.காரன் மேல் கை வச்சிபாரு” என்று அண்ணாமலைக்கு கனிமொழி எம்.பி. எச்சரிக்கை விடுத்தார்.

தேனி:
போடி சட்டமன்றத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் தங்கதமிழ்செல்வனை ஆதரித்து பழனிசெட்டிபட்டியில் கனிமொழி எம்.பி. நேற்று இரவு பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
அரவக்குறிச்சி தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலை பேசிய ஒரு வீடியோ வெளிவந்துள்ளது. பெயர் அண்ணாமலை என்று வைத்ததால் அவர் தன்னை ரஜினிகாந்த் என்று நினைத்துவிட்டார் போலும்.. பிரசாரம் செய்யும்போது எனக்கு இன்னொரு முகம் இருக்கு என்று சொல்கிறார். நாமெல்லாம் பாட்ஷா பார்த்து வளர்ந்தவர்கள். செந்தில் பாலாஜியை அடித்து விடுவேன் என்கிறார். நீ தொட்டு பாரு தம்பி. தி.மு.க.காரன் மேல் கை வச்சிபாரு. பா.ஜ.க போல நாங்கள் எத்தனை பேரை பார்த்திருப்போம். தி.மு.க.வினரை யாரும் மிரட்டிவிட முடியாது. மிரட்டினீர்கள் என்றால், எழுந்து நின்றோம் என்றால் தாங்க மாட்டீர்கள். தமிழ்நாட்டில் இந்த வேலையை வைத்துக் கொள்ளாதீர்கள். இது அதற்கான இடம் இல்லை. எங்கே? யார்? எதை பேச வேண்டும் என்று தெரிந்து பேச வேண்டும். அண்ணாமலைக்கு நாவடக்கம் வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

Next Story