திருவாரூரில் தொற்று அதிகரித்து வருவதால் 5 இடங்கள் அடைப்பு
ிருவாரூரில் கொரோனாவுக்கு மூதாட்டி பலியானார். தொற்று அதிகரித்து வருவதால் நகரில் 5 இடங்கள் அடைக்கப்பட்டு போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது.
திருவாரூர்:
திருவாரூரில் கொரோனாவுக்கு மூதாட்டி பலியானார். தொற்று அதிகரித்து வருவதால் நகரில் 5 இடங்கள் அடைக்கப்பட்டு போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது.
மூதாட்டி பலி
தமிழகத்தில் பல்வேறு தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்டிருந்த கொரோனா ஊரடங்கு மார்்ச் மாதம் 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கொரோனா வைரசால் பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் உயர்ந்து வருகிறது. இதனையடுத்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்படி தமிழகத்தில் ஏப்ரல் 30-ந்தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக தமிழக தலைமை செயலாளர் அறிவித்தார்.
திருவாரூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 47 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். மேலும் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட மூதாட்டி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
5 இடங்கள் அடைப்பு
இதுவரை 12 ஆயிரத்து 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 115 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து அரசின் வழிகாட்டுதலின்படி கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
திருவாரூர் நகரில் நோய் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு கலெக்டர் சாந்தா நோய் தொற்றை கட்டுபடுத்திட உத்தரவிட்டார். அதன்படி நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சண்முகம், மேலாளர் முத்துக்குமார் மற்றும் துப்புரவு அலுவலர் ராதாகிருஷ்ணன் மற்றும் பணியாளர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பகுதிகளான ஐ.பி.கோவில் தெரு, பெரியமில் தெரு, மானாந்தியார் தெரு, தென்றல் நகர், காரைகாட்டு தெரு உள்பட 5 இடங்கள் அடைக்கப்பட்டு போக்குவரத்து தடை செய்துள்ளனர்.
Related Tags :
Next Story