ஆத்தூர்-காளி சாலை சீரமைக்கப்பட்டது


ஆத்தூர்-காளி சாலை சீரமைக்கப்பட்டது
x
தினத்தந்தி 1 April 2021 7:10 PM GMT (Updated: 1 April 2021 7:10 PM GMT)

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியால் ஆத்தூர்-காளி சாலை சீரமைக்கப்பட்டது. இதனை பொதுமக்கள் பாராட்டினர்.

மணல்மேடு:
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியால் ஆத்தூர்-காளி சாலை சீரமைக்கப்பட்டது. இதனை பொதுமக்கள் பாராட்டினர்.
குண்டும், குழியுமாக
மணல்மேடு அருகே ஆத்தூர் முதல் கல்யாணசோழபுரம், நமச்சிவாயபுரம், காளி வரையிலான 4 கிலோ மீட்டர் வரையிலான சாலை உள்ளது. இந்த சாலை ஆங்காங்கே குண்டும், குழியுமாக காணப்பட்டது. 
இதன் வழியாக அரசு பஸ்கள், பள்ளி, கல்லூரி செல்லும் பஸ்கள், இரு சக்கர வாகனங்கள் கும்பகோணம், திருமணஞ்சேரி, பந்தநல்லூர், திருப்பனந்தாள் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றன.
சாலை சரி செய்யப்பட்டது
இந்தநிலையில் குண்டும் குழியுமான சாலை சீர்செய்யப்படுமா? என ‘தினத்தந்தி’யில் கடந்த மாதம் 15-ந் தேதி செய்தி வெளியானது. 
அதன் எதிரொலியாக சாலை சரி செய்யப்பட்டு தார் சாலை அமைக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் ‘தினத்தந்தி’க்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

Next Story