தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் கிடைத்திட எனக்கு மீண்டும் வாய்ப்பு தாருங்கள் துறையூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஸ்டாலின் குமார் பிரசாரம்
தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் கிடைத்திட எனக்கு மீண்டும் வாய்ப்பு தாருங்கள் என்று துறையூர் ெதாகுதி தி.மு.க. வேட்பாளர் ஸ்டாலின் குமார் பிரசாரம் செய்தார்.
துறையூர்,
திருச்சி மாவட்டம், துறையூர் (தனி) தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஸ்டாலின் குமார் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். நேற்று முசிறி ஒன்றியத்துக்கு உட்பட்ட துறையூர் தொகுதியில் உள்ள கோட்டாத்தூர், புத்தனாம்பட்டி, வெள்ளக்கல் பட்டி, அபினிமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கோட்டாத்தூர் பகுதிக்கு சென்றபோது அப்பகுதியை சேர்ந்த திருச்சி மாவட்ட அரசு விரைவு போக்குவரத்து கழக தொ.மு.ச. இணைச்செயலாளர் மணிவேல் கீதா, மாலை அணிவித்து கும்ப மரியாதை அளித்து வரவேற்றார். பின்னர் அப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
தொடர்ந்து பிரசாரம் மேற்கொண்ட ஸ்டாலின்குமார் பொதுமக்கள் மத்தியில் பேசுகையில், உங்கள் பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளான தார்சாலை, தெருவிளக்குகள், பஸ் வசதி, குடிநீர், நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொடுத்துள்ளேன். தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் கிடைத்திட மீண்டும் எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி வாய்ப்பை தாருங்கள் என்று கேட்டுக் கொண்டார்.
பிரசாரத்தின்போது மாவட்ட ஊராட்சி குழு தலைவர் தர்மன் ராஜேந்திரன, ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, மாவட்ட பிரதிநிதி மதியழகன், வார்டு செயலாளர் மோகன் நல்லுசாமி, கோட்டாத்தூர் கிளைச் செயலாளர் கணேசன், ஒன்றிய பொருளாளர் சுப்பிரமணியன் உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story