திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி சுப்ரமணியபுரம், கே.கே.நகர் பகுதிகளில் அ.ம.மு.க. வேட்பாளர் ஆர்.மனோகரன் தீவிர வாக்கு சேகரிப்பு


திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி சுப்ரமணியபுரம், கே.கே.நகர் பகுதிகளில் அ.ம.மு.க. வேட்பாளர் ஆர்.மனோகரன் தீவிர வாக்கு சேகரிப்பு
x
தினத்தந்தி 2 April 2021 11:56 AM IST (Updated: 2 April 2021 11:56 AM IST)
t-max-icont-min-icon

அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருச்சி கிழக்கு தொகுதி வேட்பாளர் ஆர். மனோகரன் கே.கே. நகர் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

திருச்சி,

திருச்சி கிழக்கு சட்ட மன்ற தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளராக அக்கட்சி யின் மாநில பொருளாளரும், முன்னாள் அரசு தலைமை கொறடாவுமான ஆர். மனோகரன் போட்டியிடுகி றார். வேட்பாளர் மனோகரன் நேற்று காலை சுப்ரமணியபுரம் எம்.ஜி.ஆர். சிலை அருகில் இருந்து வாக்கு சேகரிக்கும் பணியை தொடங்கினார். எம்.ஜி.ஆர்.நகர் ஜெயலலிதா நகர், கொட்டப்பட்டு ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்த மனோகரன் வயர்லெஸ் சாலையில் டி.எஸ்.என். அவின்யு, காமராஜ்நகர், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் திறந்த ஜீப்பில் சென்று வாக்கு சேகரித்தார். இதனைத்தொடர்ந்து திருச்சி 38-வது வார்டு கே.கே. நகர் பகுதிகளில் வாக்கு சேகரித்தார். 

கக்கன் காலனியில் வாக்கு சேகரித்தபோது அவ ருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். அவர்கள் மத்தியில் மனோ கரன் பேசியதாவது:- 2011 முதல் 2016 வரை நான் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த போது கே.கே. நகரில் பஸ் நிலையம் கட்டி கொடுத்தேன். அது மக்களுக்கு இப்போது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.  தார் சாலை இல்லாதவர்களுக்கு தார்சாலை வசதி அமைத்துக் கொடுத்தேன். பல ஆண்டு காலமாக குண்டும் குழியுமாக இருந்த வயர்லெஸ் சாலையை ஒரு கோடி செலவில் புதுப் பித்தேன். குடிநீர்ப் பிரச்சினை யைத் தீர்த்து வைத்தேன். இப்படி பல வசதிகளை செய்து கொடுத்து உள்ளேன். இம்முறை குக்கர் சின்னத்தில் போட்டியிடும் எனக்கு நீங்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்தால் மீண்டும் உங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்து கொடுப்பேன். மறந்து விடாமல் குக்கர் சின்னத்திற்கு வாக்களியுங்கள். 

இவ்வாறு அவர் பேசினார். வேட்பாளர் மனோகரனுடன் அ.ம.மு.க. மாநில இளைஞரணி செயலாளர் ஜோதிவாணன், டாக்டர்.சுப்பையா, மாநகர் மாவட்ட அவைத் தலைவர் சாத்தனூர் ராமலிங்கம் மற்றும் ரமேஷ் உள்பட நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கூட்டணி கட்சியை சேர்ந்த தே.மு.தி.க வினர் சென்றிருந்தனர்.

Next Story