பேரளம் அருகே சாராயம் விற்ற 3 பேர் கைது மோட்டார் சைக்கிள் பறிமுதல்
பேரளம் அருகே சாராயம் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
நன்னிலம்,
பேரளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவநேசன் மற்றும் போலீசார் பேரளம் சுற்றுவட்டார பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கீரனூர் அய்யனார் கோவில் பின்புறம் ஒரு மோட்டார் சைக்கிளுடன் சந்தேகம் படும் வகையில் நின்று கொண்டிருந்த ஒரு நபரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், கீரனூர் கீழ தெருவை சேர்ந்த கண்ணன் (வயது55) என்பது தெரிய வந்தது. இதை தொடர்ந்து அவரது மோட்டார் சைக்கிளில் போலீசார் சோதனை செய்த போது 110 லிட்டர் புதுச்கேரி சாராயம் இருந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தையும், மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
பெட்டிக்கடையில் சாராயம் விற்பனை
இதேபோல பேரளம் அருகே உள்ள சிறுபுலியூரை சேர்ந்த உலகநாதன் (40) என்பவர் நடத்தி வரும் பெட்டி கடையில் போலீசார் சோதனை நடத்திய போது 110 லிட்டர் புதுச்சேரி சாராயம் இருந்தது. மேலும் அவர் பெட்டிக்கடையில் வைத்து சாராயம் விற்பனை செய்ததும் தெரிய வந்தது.
இதை தொடர்ந்து உலகநாதனை போலீசாார் கைது செய்து அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
வெள்ளை அதம்பார் திருமலைராஜன் பாலம் அருகே சாராயம் விற்ற ராஜேந்திரன் (57) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 42 சாராய பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story