மதுவிற்ற 36 பேர் கைது


மதுவிற்ற 36 பேர் கைது
x
தினத்தந்தி 2 April 2021 6:34 PM GMT (Updated: 2 April 2021 6:34 PM GMT)

மதுவிற்ற 36 பேர் கைது செய்யப்பட்டனர்

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் மதுவிலக்கு போலீசார் மற்றும் அந்நத பகுதி போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் கள்ளத்தனமாக மதுவிற்பனை செய்த 36 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 255 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதவிர, மாவட்டம் முழுவதும் போலீசார் நடத்திய சோதனையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ததாக 4 பேரை கைது செய்தனர்.

Next Story