மேலும் 75 பேருக்கு கொரோனா


மேலும் 75 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 3 April 2021 1:01 AM IST (Updated: 3 April 2021 1:01 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 75 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக தற்போது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 465 ஆக உயர்ந்துள்ளது.

திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 75 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக தற்போது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 465 ஆக உயர்ந்துள்ளது.
75 பேருக்கு கொரோனா தொற்று
திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது.
இதனால் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா தொற்று மீண்டும் விஸ்வரூபம் எடுக்க தொடங்கியுள்ளது. நாளுக்கு நாள் பாதிப்பும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 75 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
கடும் நடவடிக்கை
இவர்கள் அனைவரும் தற்போது திருப்பூர், கோவை மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 465-ஆக உயர்ந்துள்ளது. இதுபோல் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 39 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர்.
இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மாவட்டத்தில் 18 ஆயிரத்து 801-ஆக உயர்ந்துள்ளது. தற்போது கொரோனா பாதித்த 480 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சிகிச்சை பலன் இன்றி இதுவரை 186 பேர் பலியாகியுள்ளனர்.
 கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story