தேவாலயங்களில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை
விருதுநகரில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்களில் புனித வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது.
விருதுநகர்,
விருதுநகரில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்களில் புனித வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது.
புனித வெள்ளி
ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட தினத்தை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் பெரிய வெள்ளி அல்லது புனித வெள்ளி என்று அழைத்து துக்க நாளாக கடைபிடிக்கின்றனர். இதனையொட்டி விருதுநகரில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்களில் ஏசுவின் பாடுகளை நினைவு கூறும் வகையில் நேற்று அதிகாலை முதல் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. நேற்று மாலை ஏசு கிறிஸ்துவின் 14 பாடுகளை தியானிக்கும் சிலுவைப்பாதை நிகழ்ச்சி நடைபெற்றது.
திருப்பலி
இதனை தொடர்ந்து சிறப்பு திருப்பலி, மறையுரை நடைபெற்றது.
விருதுநகர் புனித இன்னாசியர் ஆலயத்தில் அதிபரும், பங்கு தந்தையுமான பெனடிக் அம்புரோஜ் ராஜ், துணை பங்குதந்தை சந்தியாகப்பர் அடிகளார் ஆகியோர் தலைமையில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை, திருப்பலி மற்றும் மறையுரை நடைபெற்றது.
இதேபோன்று பாண்டியன் நகர் தூய சவேரியார் ஆலயத்தில் பங்குத்தந்தை ஸ்டீபன் சேவியர் அடிகளார், எஸ்.எப்.எஸ். பள்ளி முதல்வர் இன்னாசிமுத்து அடிகளார் ஆகியோர் தலைமையிலும் விருதுநகர் நிறைவாழ்வு நகர் தூய ஜெபமாலை அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை தாமஸ் வெனிஸ்அடிகளார் தலைமையிலும், விருதுநகர் அருகேயுள்ள ஆர்.ஆர்.நகர் வேளாங்கண்ணி ஆரோக்கியன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை அலெக்ஸ்ஞானராஜ் அடிகளார், துணைப்பங்குத்தந்தை பென்சிகர் அடிகளார் ஆகியோர் தலைமையிலும், சாத்தூர் ஒத்தையால் ஏசு ஆலயத்தின் பங்கு தந்தை ஜெயராஜ் அடிகளார் தலைமையிலும், புனித வெள்ளி சிறப்பு திருப்பலி மற்றும் மறையுரை நடைபெற்றது.
இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். நாளை ஏசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை முன்னிட்டு ஈஸ்டர் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
அருப்புக்கோட்டை
அருப்புக்கோட்டைசி.எஸ்.ஐ. இம்மானுவேல் தேவாலயத்தில் புனித வெள்ளி மும்மணி தியான ஆராதனை நடைபெற்றது. குருவானவர்கள் எபினேசர் ஜாஷ்வா தலைமையில் பாஸ்கரன், ஜான் மனோகரதாஸ், ஜெயசீலன், கனகராஜ் ஆகியோர் ஏசு கிறிஸ்துவின் ஏழு வசனங்கள் குறித்து பேசினர்.
ஆலங்குளம்
வத்திராயிருப்பு அருகே உள்ள வ.புதுப்பட்டி பங்கு மேலக்கோபாலபுரம் தூய மரியாளின் மாசற்ற திரு இருதய ஆலயத்தில் புனித வெள்ளியான நேற்று ஏசுவின் பாடுகளின் திருச்சிலுவைப்பாதை பிரார்த்தனையினை உதவி பங்குத்தந்தை அருட்பணி மைக்கேல் யூஜின் நடத்தி வைத்தார்.
தாயில்பட்டியில் சி.எஸ்.ஐ. தேவாலயத்தில் தியான ஆராதனை நடைபெற்றது. ஆலங்குளம் சிமெண்டு ஆலை காலனி, மாதாங்கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
Related Tags :
Next Story