வாக்குப்பதிவால் வெறிச்சோடிய சாலைகள்


வாக்குப்பதிவால் வெறிச்சோடிய சாலைகள்
x
தினத்தந்தி 6 April 2021 5:17 PM GMT (Updated: 6 April 2021 5:17 PM GMT)

வாக்குப்பதிவால் சாலைகள் வெறிச்சோடின

ராமேசுவரம், 
ராமநாதபுரம் தொகுதியில் ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன் உள்ளடங்கிய ராமேசுவரம் தாலுகாவில் 95 வாக்குச்சாவடிகளில்  விறுவிறுப்பாக வாக்குகள் பதிவானது.  பதற்றமான வாக்குச்சாவடிகளாக கருதப்பட்ட வேர்க்கோடு வாக்குச்சாவடி பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு இருந்தனர். அங்குள்ள ஒரு வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரம் பழுதானதால் 20 நிமிடம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கப்பட்டது. அப்போது அந்த பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது. நேரம் போகப் போக வெயிலின் தாக்கம் அதிகம் இருந்தாலும் வாக்காளர்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் வந்து வாக்களித்தனர். தேர்தலையொட்டி ராமேசுவரத்திற்கு பக்தர்கள் வருகை மிகவும் குறைவாக இருந்ததால் கோவில், கடற்கரை பகுதி, ரதவீதி பகுதி, தனுஷ்கோடி பகுதி வெறிச்சோடியது. வாக்குப்பதிவு நேரத்தில் எங்கும் எந்த பிரச்சினையும் இல்லாமல் அமைதியாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

Next Story