மாவட்ட செய்திகள்

புவனகிரி அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலைகாரணம் என்ன? போலீசார் விசாரணை + "||" + Worker commits suicide by hanging

புவனகிரி அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலைகாரணம் என்ன? போலீசார் விசாரணை

புவனகிரி அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலைகாரணம் என்ன? போலீசார் விசாரணை
தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
கடலூர், 
புவனகிரி அருகே உள்ள வட தலகுளம் பகுதியை சேர்ந்தவர் பானுகோபால். இவரது மகன் வெங்கட்ராமன் (வயது 27). இவர் சென்னையில் உள்ள துறைமுகத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கும் புவனகிரி அடுத்த உள்மருவாய் பகுதியை சேர்ந்த ஆனந்தி என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் சம்பவத்தன்று வெங்கட்ராமன், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த மருதூர் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தற்கொலை செய்துகொண்ட வெங்கட்ராமன் உடலை பார்வையிட்டு, அவரது உறவினர்களிடம் விசாரணை நடத்தினர்.
பின்னர் போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பானு கோபால், மருதூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கட்ராமன் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா?, அல்லது அவரது சாவுக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 6 மாதத்தில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. பரமத்திவேலூரில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
பரமத்திவேலூரில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
2. எஸ்.வாழவந்தியில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
எஸ்.வாழவந்தியில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
3. தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
4. தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
5. நாமக்கல்லில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.