இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 28-11-2025


தினத்தந்தி 28 Nov 2025 9:12 AM IST (Updated: 29 Nov 2025 8:52 AM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • நடிகர் ரஜினிகாந்திற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
    28 Nov 2025 8:04 PM IST

    நடிகர் ரஜினிகாந்திற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

    கோவாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிகாந்திற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. 50 ஆண்டுகள் திரையுலகில் புரிந்த சாதனைகளுக்காக கோவாவில் நடைபெற்று வரும் 56ஆவது சர்வதேச திரைப்பட விழாவில் விருது வழங்கப்பட்டுள்ளது. 

  • 28 Nov 2025 7:49 PM IST

    டிட்வா புயல் எதிரொலி: கள்ளக்குறிச்சியில் நாளை கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

  • டிட்வா புயல் எதிரொலி: தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
    28 Nov 2025 7:39 PM IST

    டிட்வா புயல் எதிரொலி: தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

    நாளை தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை பள்ளிகளில் சிறப்பு வகுப்புகளை நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

  • புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அதிகனமழை எச்சரிக்கை
    28 Nov 2025 7:21 PM IST

    புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அதிகனமழை எச்சரிக்கை

    டிட்வா புயல் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அதிகனமழைக்கான எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளதால், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் முகாமிட்டுள்ளனர். அறந்தாங்கியில் 35 பேர் கொண்ட அணி, தகுந்த மீட்புக் கருவிகளுடன் தங்க வைக்கப்பட்டுள்ளனர்

  • 28 Nov 2025 7:14 PM IST

    டிட்வா புயல் எதிரொலி: விழுப்புரம் மாவட்டத்தில் நாளை(29.11.2025) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

  • 28 Nov 2025 7:14 PM IST

    நாகையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

  • 28 Nov 2025 7:14 PM IST

    டிட்வா புயல் எதிரொலி: புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

  • 28 Nov 2025 7:13 PM IST

    டிட்வா புயல் எதிரொலி: மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

  • உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி ஊக்கமளிக்கிறது - பிரதமர் நரேந்திர மோடி
    28 Nov 2025 7:12 PM IST

    உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி ஊக்கமளிக்கிறது - பிரதமர் நரேந்திர மோடி

    2025-26 ஆண்டின் 2ஆம் காலாண்டில் 8.2% உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி ஊக்கமளிக்கிறது நமது வளர்ச்சி, ஆதரவு கொள்கைகள், சீர்திருத்தங்களின் தாக்கத்தை பிரதிபலிக்கிறது; நமது அரசு தொடர்ந்து சீர்திருத்தங்களை முன்னெடுத்துச் சென்று ஒவ்வொருவரின் வாழ்வை எளிதாக்கும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

  • டிட்வா புயலால் இலங்கையில் 56 பேர் பலி - பிரதமர் மோடி இரங்கல்
    28 Nov 2025 6:07 PM IST

    டிட்வா புயலால் இலங்கையில் 56 பேர் பலி - பிரதமர் மோடி இரங்கல்

    இலங்கையில் டிட்வா புயலால் அன்புக்குரியவர்களை இழந்த இலங்கை மக்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட அனைவரும் விரைவில் மீண்டுவர பிரார்த்திக்கிறேன்; சாகர் பந்து திட்டத்தின் கீழ் அண்டை நாடான இலங்கைக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்படும்; மகாசாகர் திட்டத்தின்கீழ் இலங்கைக்கு தேவையான உதவிகளை செய்துதர தயாராக உள்ளோம் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

1 More update

Next Story