பொதுமக்களுக்கு வினியோகித்த ‘மப்ளர்கள்’ பறிமுதல்


பொதுமக்களுக்கு வினியோகித்த ‘மப்ளர்கள்’ பறிமுதல்
x
தினத்தந்தி 6 April 2021 11:24 PM GMT (Updated: 2021-04-07T05:15:59+05:30)

பொதுமக்களுக்கு வினியோகித்த ‘மப்ளர்கள்’ பறிமுதல்.

கோத்தகிரி,

வாக்குப்பதிவு நாளான நேற்று குன்னூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் சப்-கலெக்டர் ரஞ்சித் சிங் ஆய்வு மேற்கொண்டார். 

அப்போது கோத்தகிரி பாண்டியன் பூங்கா பகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடிக்கு அருகில் சிலர் இரட்டை இலை சின்னம் பொறிக்கப்பட்ட விளம்பர பதாகைகளை கையில் ஏந்தியவாறு வாக்களிக்க வரும் பொதுமக்களுக்கு அ.தி.மு.க. கொடியில் உள்ள வர்ணம் கொண்ட மப்ளர்களை வினியோகித்து கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. 

உடனே அந்த விளம்பர பதாகைகள் மற்றும் மப்ளர்களை சப்-கலெக்டர் ரஞ்சித் சிங் அதிரடியாக பறிமுதல் செய்தார். இதுகுறித்து கோத்தகிரி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. 

Next Story