கோவில்பட்டி அருகே வக்கீல் வீட்டில் திருட முயற்சி


கோவில்பட்டி அருகே வக்கீல் வீட்டில் திருட முயற்சி
x
தினத்தந்தி 7 April 2021 3:36 PM GMT (Updated: 2021-04-07T21:06:36+05:30)

கோவில்பட்டி அருகே வக்கீல் வீட்டில் திருட முயற்சி

கோவில்பட்டி:
கோவில்பட்டியை அருகேயுள்ள இனாம்மணியாச்சி சாய்பாபா நகரைச் சேர்ந்த ஆனந்தன் மகன் சுரேஷ் (வயது 47) வக்கீல். இவரது மனைவி ஜீவரத்தினம் செல்லத்தாய். இவர் தேர்தல் பணிக்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பு தென்காசி மாவட்டம் சுரண்டைக்கு சென்றுவிட்டாராம். சுரேஷ் நேற்று சங்கரன்கோவில் நீதிமன்றத்திற்கு பணிக்குச் சென்று விட்டாராம். இந்நிலையில், நேற்று சுரேஷ், அவரது மனைவி ஜீவரத்தினம் செல்லத்தாயுடன் வீட்டிற்கு வந்த போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் உள்ளே சென்று பார்த்த போது, வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, பொருள்கள் சிதறிக் கிடந்ததது. மேலும், வீட்டில் உள்ள முக்கிய பொருள்கள் ஏதும் திருடு போகவில்லையாம்.
இதுகுறித்து, சுரேஷ் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story