பேரணாம்பட்டு அருகே ஒற்றை காட்டுயானை அட்டகாசம்ெநல், வாைழயை துவம்சம் செய்தது


பேரணாம்பட்டு அருகே ஒற்றை காட்டுயானை அட்டகாசம்ெநல், வாைழயை துவம்சம் செய்தது
x
தினத்தந்தி 7 April 2021 3:45 PM GMT (Updated: 7 April 2021 3:45 PM GMT)

பேரணாம்பட்டு அருேக ஒன்றை காட்டுயானை அட்டகாசம் செய்து வருகிறது. வனப்பகுதியையொட்டி பயிரிடப்பட்டுள்ள நெல், வாழையை துவம்சம் செய்தது.

பேரணாம்பட்டு

ஒன்றை காட்டுயானை 

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டை அடுத்த மிட்டாளம், பைரப்பல்லி பகுதியில் விவசாய நிலங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அட்டகாசம் செய்த ஒற்றை காட்டுயானை மீண்டும் நேற்று அதிகாலை பேரணாம்பட்டு அருகே பாலூர், கொத்தூர் ஆகிய கிராம வனப்பகுதியையொட்டி உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்தது. பாலூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வம் என்பவரின் நிலத்தில் 3 ஏக்கர் நெற்பயிரை மிதித்து துவம்சம் செய்தது. 

கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கோமதி என்பவரின் தென்னந்தோப்பின் நடுவே 3 ஏக்கரில் அமைந்துள்ள வாழைத்தோட்டத்துக்குள் புகுந்த காட்டுயானை அங்கு குலைதள்ளிய வாழை மரங்களை அடியோடு சாய்த்து, வாழை குலைகளை சாப்பிட்டு ருசித்தது. பாசன வசதிக்காக போடப்பட்டு இருந்த பிளாஸ்டிக் பைப் லைன், 2 முள்கம்பங்கள் ஆகியவற்றை பிடுங்கி எறிந்தது. அங்கு செந்தில் என்பவரின் வாழைத்தோப்புக்குள் புகுந்து வாழை மரங்களை சாய்த்து சேதப்படுத்தி காட்டுயானை அட்டகாசத்தில் ஈடுபட்டது.

ஒற்றை காட்டுயானை பாலூர்-கொத்தூர் வனப்பகுதிக்கு இடையே சுற்றித்திரிவதால் வனப்பகுதியையொட்டி உள்ள விவசாயிகள் தங்கள் விளை நிலங்களுக்கும், மா, வாழை, தென்னை தோட்டங்களுக்கும் பகல் நேரத்தில் சென்று வர அச்சப்படுகின்றனர். 

நடவடிக்கை எடுக்க வேண்டும்

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆம்பூர் வனத்துறையினர் சேதமடைந்த விவசாய நிலங்களை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது விவசாயிகள், வனத்துறையினரிடம் கூறுகையில், காட்டுயானைகள் கூட்டமாக வந்து விவசாய நிலங்களுக்குள் புகுந்தால் பட்டாசுகள், பாணம் ஆகியவற்றை வெடித்து விரட்டினால் மெல்ல நகர்ந்து வனப்பகுதிக்குள் சென்று விடும். ஆனால் ஒற்றை காட்டுயானையாக இருப்பதால் ஒரே பகுதிக்குள் சுற்றித்திரிவதால் தனியாக விவசாய நிலங்களுக்குச் செல்ல பயமாக உள்ளது. உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. ஒற்றை காட்டுயானையை விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என முறையிட்டனர்.

Next Story