பொள்ளாச்சியில் ஒரே நாளில் 8 பேருக்கு தொற்று கொரோனாவுக்கு ஒருவர் பலி

பொள்ளாச்சியில் கொரோனா பாதிக்கப்பட்ட ஒருவர் இறந்து உள்ளார். மேலும் ஒரே நாளில் 8 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் கொரோனா பாதிக்கப்பட்ட ஒருவர் இறந்து உள்ளார். மேலும் ஒரே நாளில் 8 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
கொரோனாவுக்கு ஒருவர் பலி
பொள்ளாச்சி நகராட்சி பகுதிகளில் கொரோனா பாதிப்பு கடந்த சில மாதங்களாக குறைந்து இருந்தது. தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
இந்த நிலையில் பொள்ளாச்சியை சேர்ந்த 56 வயது நபர் ஒருவருக்கு கடந்த 31-ந் தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.
இதையடுத்து அவர் வசித்த பகுதியில் கிருமி நாசினி மருந்து தெளித்தல் உள்ளிட்ட தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
49 பேருக்கு சிகிச்சை
மேலும் நியூஸ்கீம் ரோட்டில் 36 வயது பெண்ணுக்கும், சுண்ணாம்பு கால்வாய் பகுதியில் 65 வயது முதியவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது.
குப்புசாமி வீதியில் 38 வயது நபருக்கும், ஜோதி நகர் டி காலனியில் 39 வயது பெண்ணுக்கும், 70 வயது முதியவருக்கும், லதாங்கி அவென்யூவில் 30 வயது பெண்ணுக்கும், 34 வயது நபருக்கும், அழகாபுரி வீதியில் 31 வயது நபருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறும்போது, பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
ஒரே நாளில் 8 பேருக்கு பாதிப்பும், ஒருவர் உயிரிழந்து உள்ளார். தற்போது கொரோனா பாதிக்கப்பட்ட 49 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றனர்.
Related Tags :
Next Story