மாவட்ட செய்திகள்

விஷம் தின்ற முதியவர் சாவு + "||" + Death

விஷம் தின்ற முதியவர் சாவு

விஷம் தின்ற முதியவர் சாவு
விஷம் தின்ற முதியவர் பரிதாபமாக இறந்தார்.
குளித்தலை
குளித்தலை அருகே உள்ள குமாரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 60). இவருக்கு கடந்த சில மாதமாக உயிர் நாடியில் கட்டி ஏற்பட்டு வலி தாங்க முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் தொடர்ந்து வலி ஏற்பட்டு வந்ததால் வலி தாங்க முடியாமல் சம்பவத்தன்று வீட்டில் இருந்த குருணை மருந்து (விஷம்) தின்று மயங்கி உள்ளார். இதையறிந்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் செல்வராஜ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
2. கரூரில் மது என நினைத்து விஷத்தை குடித்த கொத்தனார் சாவு
கரூரில் மது என நினைத்து விஷத்தை குடித்த கொத்தனார் பரிதாபமாக இறந்தார்.
3. விஷம் குடித்து விவசாயி தற்கொலை
சாத்தூரில் விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
4. அழுகிய நிலையில் மூதாட்டி பிணம்
உடல் அழுகிய நிலையில் மூதாட்டி பிணமாக கிடந்தார்.
5. ரெயிலில் அடிபட்டு பெண் சாவு
அரியலூர் அருகே ரெயிலில் அடிபட்டு பெண் இறந்தார்.