மண்வெட்டியால் தொழிலாளி அடித்துக்கொலை


மண்வெட்டியால் தொழிலாளி அடித்துக்கொலை
x

மானாமதுரையில் மண்வெட்டியால் தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். குடிபோதையில் வெறிச்செயலில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

மானாமதுரை,

மானாமதுரையில் மண்வெட்டியால் தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். குடிபோதையில் வெறிச்செயலில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

வாக்குவாதம்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள தெளிச்சாத்தநல்லூர் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 54). இவர் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கண்ணர்தெரு பகுதியில் உள்ள மதுக்கடை அருகே உள்ள பெட்டிக்கடைகளில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை கண்ணர் தெரு பெட்டிக்கடை அருகே குணசேகரன் நின்றிருந்தார். அங்கு அதே பகுதியை சேர்ந்த சன்னாசி என்பவரது மகன் சரவணன்(33) குடிபோதையில் வந்தார். அப்போது சரவணனுக்கும், குணசேகரனுக்கும் வாய்தகராறு ஏற்பட்டது. இருவரும் கடும் வாக்குவாதம் செய்து கொண்டனர்.

அடித்துக்கொலை

பின்னர் சரவணன், குணசேகரனை குடிபோதையில் அடிக்க முயன்றார். உடனே அவர் அங்கிருந்து ஓடினார். அவரை விரட்டி சென்ற சரவணன் ஒரு வீடு அருகே கிடந்த மண்வெட்டியை எடுத்து குணசேகரனை பலமாக தாக்கினார். 
இதில் நிலைக்குலைந்த குணசேகரன் கீழே விழுந்தார். அவரை மண்வெட்டியால் தொடர்ந்து தாக்கியதால் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். இதை தொடர்ந்து சரவணன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரமாணிக்கம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு கொலை செய்யப்பட்டு கிடந்த குணசேகரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கைது

இதற்கிடைேய தொழிலாளியை கொலை செய்து விட்டு தப்பி ஓடிய சரவணனை போலீசார் கைது செய்தனர். கைதான சரவணன் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். கொலைக்கான காரணம் குறித்து சரவணனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் குடிபோதையில் இருந்ததால் சரிவர பதில் அளிக்கவில்ைல. போதை தெளிந்தவுடன் விசாரணை நடத்த உள்ளனர்.
குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் மானாமதுரை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story