கரூர் மாவட்டத்தில் மொத்தம் 83.96 சதவீதம் வாக்குகள்: தொகுதி வாரியாக பதிவான வாக்குகள் எண்ணிக்கை


கரூர் மாவட்டத்தில் மொத்தம் 83.96 சதவீதம் வாக்குகள்: தொகுதி வாரியாக பதிவான வாக்குகள் எண்ணிக்கை
x
தினத்தந்தி 7 April 2021 6:22 PM GMT (Updated: 7 April 2021 6:22 PM GMT)

கரூர் மாவட்டத்தில் மொத்தம் 83.96 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. இதில் தொகுதி வாரியாக பதிவான வாக்குகள் எண்ணிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கரூர்
சட்டமன்ற தேர்தல்
கரூர் மாவட்டத்தில் கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் (தனி), குளித்தலை ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் நேற்றுமுன்தினம் காலை 7 மணிக்கு தொடங்கி இரவு 7 மணிக்கு முடிவடைந்தது. கரூர் மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும் மொத்தம் 8 லட்சத்து 99 ஆயிரத்து 236 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 83.96 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
தொகுதி வாரியாக
அதன்படி தொகுதி வாரியாக வாக்குப்பதிவு விவரம் வருமாறு:-
அரவக்குறிச்சி
மொத்த வாக்குகள்-2,13,946
பதிவான வாக்குகள்-1,75,266
ஆண்கள்-83,509
பெண்கள்-91,757
சதவீதம்-81.92
கரூர்
மொத்த வாக்குகள்-2,45,285
பதிவான வாக்குகள்-2,04,903
ஆண்கள-99,149
பெண்கள்-1,05,742
சதவீதம்-83.54
கிருஷ்ணராயபுரம் (தனி) 
மொத்த வாக்குகள்-2,12,937
பதிவான வாக்குகள்-1,79,231
ஆண்கள்-88,777
பெண்கள்-90,452
சதவீதம்-84.17
குளித்தலை
மொத்த வாக்குகள்-2,27,068
பதிவான வாக்குகள்-1,95,634
ஆண்கள்-95,954
பெண்கள்-99,679
சதவீதம்-86.16
4 சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 83.96 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.

Next Story