கார்- மோட்டார்சைக்கிள் மோதல்; விவசாயி பலி


கார்- மோட்டார்சைக்கிள் மோதல்; விவசாயி பலி
x
தினத்தந்தி 7 April 2021 7:14 PM GMT (Updated: 2021-04-08T00:44:35+05:30)

வடக்கு விஜயநாராயணம் அருகே காரும், மோட்டார்சைக்கிளும் மோதிக் கொண்ட விபத்தில் விவசாயி பலியானார்.

இட்டமொழி, ஏப்:
வடக்கு விஜயநாராயணம் வேதக்கோவில் தெருவை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 52), விவசாயி. இவர் நேற்று மாலை வடக்கு விஜயநாராயணத்தில் இருந்து ஐ.என்.எஸ். கட்டபொம்மன் கடற்படை தளம் செல்லும் சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். நாங்குநேரியில் இருந்து திசையன்விளை செல்லும் சாலையை ராமமூர்த்தி கடக்க முயன்றபோது, எதிரே வந்த கார் மோதியது. இதில் ராமமூர்த்தி படுகாயம் அடைந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே ராமமூர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து வடக்கு விஜயநாராயணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் வழக்குப்பதிவு செய்து, கார் டிரைவர் பாளையங்கோட்டை கே.டி.சி. நகரை சேர்ந்த இருதயராஜ் மகன் தாமஸ் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story