கட்டிட மேற்பார்வையாளர் வீட்டில் நகை- பணம் திருட்டு


கட்டிட மேற்பார்வையாளர் வீட்டில் நகை- பணம் திருட்டு
x
தினத்தந்தி 7 April 2021 7:19 PM GMT (Updated: 7 April 2021 7:19 PM GMT)

திசையன்விளை அருகே கட்டிட மேற்பார்வையாளர் வீட்டில் நகை, பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.

திசையன்விளை, ஏப்:
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்தவர் சிவா (வயது 39). இவர் திசையன்விளையை அடுத்துள்ள அப்புவிளை பஞ்சாயத்து அலுவலகத்திற்கு எதிரில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இவர் விஜயநாராயணம் ஐ.என்.எஸ்.சில் கட்டிட மேற்பார்வையாளராகவும், இவரது மனைவி பத்மாவதி திசையன்விளையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராகவும் பணியாற்றி வருகின்றனர் கடந்த 5-ந் தேதி இருவரும் காலையில் வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் வாசல்கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தது. கட்டில் அடியில் வைத்திருந்த 13 பவுன் தங்க நகைகள், ரூ.25 ஆயிரம் மற்றும் வெள்ளி பொருட்கள் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Next Story
  • chat