பாளையங்கோட்டையில் குறைவு; அம்பாசமுத்திரம் தொகுதியில் அதிகமான வாக்குப்பதிவு


பாளையங்கோட்டையில் குறைவு; அம்பாசமுத்திரம் தொகுதியில் அதிகமான வாக்குப்பதிவு
x
தினத்தந்தி 7 April 2021 7:38 PM GMT (Updated: 2021-04-08T01:08:39+05:30)

பாளையங்கோட்டை தொகுதியில் குறைவான வாக்குகள் பதிவாகியது. அதே நேரத்தில் அம்பாசமுத்திரம் தொகுதியில் அதிகமான வாக்குகள் பதிவாகியது.

நெல்லை, ஏப்:
நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதியில் குறைந்த அளவு வாக்கு பதிவாகி உள்ளது. அதே நேரத்தில் அம்பை தொகுதியில் அதிகமான வாக்குகள் பதிவாகியது.

அம்பையில் அதிகம்

நெல்லை மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலில் 5 தொகுதிகளிலும் சராசரியாக 66.54 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.
நெல்லை தொகுதியில் மொத்தம் 2,92,008 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 96,812, பெண்கள், 98,535, இதர வாக்காளர்கள் 19 பேர் என மொத்தம் 1,95,366 பேர் வாக்களித்துள்ளனர். இது 66.9 சதவீதம் ஆகும்.
அம்பை தொகுதியில் மாவட்டத்திலேயே அதிகபட்சமாக 72.05 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. அம்பை தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 44 ஆயிரத்து 658 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 81,792 ஆண்கள், 91,480 பெண்கள், இதர வாக்காளர் ஒருவர் என மொத்தம் 1,76,273 பேர் வாக்களித்து உள்ளனர். இது 72.05 சதவீதம் ஆகும்.

பாளையங்கோட்டையில் குறைவு

பாளையங்கோட்டை தொகுதியில் மாவட்டத்திலேயே குறைந்தபட்சமாக 57.76 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. 
பாளையங்கோட்டை தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 73 ஆயிரத்து 379 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 78,358 ஆண்கள், 79,557 பெண்கள் என மொத்தம் 1,57,915 பேர் வாக்களித்துள்ளனர். இது 57.76 சதவீதம் ஆகும்.
நாங்குநேரி தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 73 ஆயிரத்து 379 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 92,771 ஆண்கள், 97 ஆயிரத்து 645 பெண்கள், இதர வாக்காளர் ஒருவர் என மொத்தம் 1,90,417 பேர் வாக்களித்தனர். இது 68.60 சதவீதமாகும்.

இதேபோல் ராதாபுரம் தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 70 ஆயிரத்து 525 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 87,778 ஆண்கள், 96,019 பெண்கள், 2 இதர வாக்காளர்கள் என 1,83,799 பேர் வாக்களித்துள்ளனர். இது 67.94 சதவீதம் ஆகும்.
மாவட்டத்தில் மொத்தம் 6 லட்சத்து 64 ஆயிரத்து 627 ஆண்கள், 6 லட்சத்து 93 ஆயிரத்து 417 பெண்கள், 104 இதர வாக்காளர்கள் என மொத்தம் 13 லட்சத்து 58 ஆயிரத்து 148 வாக்காளர்கள் உள்ளனர். 

இவர்களில் 4 லட்சத்து 40 ஆயிரத்து 511 ஆண்கள், 4 லட்சத்து 63 ஆயிரத்து 236 பெண்கள், 23 இதர வாக்காளர்கள் என மொத்தம் 9 லட்சத்து 3 ஆயிரத்து 770 பேர் வாக்களித்துள்ளனர். இது 66.54 சதவீதமாகும்.

Next Story