தொழிலாளி வெட்டிக்கொலை


தொழிலாளி வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 8 April 2021 11:12 PM IST (Updated: 8 April 2021 11:12 PM IST)
t-max-icont-min-icon

கொள்ளிடம் அருகே கூலி தொழிலாளியை வெட்டிக்கொன்ற தம்பியை போலீசார் கைது செய்தனர்.

கொள்ளிடம்:
கொள்ளிடம் அருகே கூலி தொழிலாளியை வெட்டிக்கொன்ற தம்பியை போலீசார் கைது செய்தனர்.
அண்ணன்-தம்பி இடையே தகராறு
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே சிதம்பரநாதபுரம் கிராமம் தோப்பு தெருவை சேர்ந்த பாரதிதாசன் மகன் கவிபாலன் (வயது 25). கூலிதொழிலாளியான இவருக்கும், இவரின் தம்பி கவிதாசன் (23) என்பவருக்கும் இடையே குடும்ப தகராறு காரணமாக  முன்விரோதம் இருந்து வந்தது. 
நேற்று முன்தினம் இரவு கவிபாலன் மற்றும் கவிதாசன் ஆகிய இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கவிபாலன் வீட்டைவிட்டு சற்று தூரத்தில் உள்ள காளியம்மன் கோவில் அருகே கார்த்திக் என்பவருக்கு சொந்தமான வீட்டின் முன்பகுதியில் படுத்து தூங்கி கொண்டு இருந்தார். 
வெட்டிக்கொலை
நள்ளிரவு 12 மணி அளவில் கவிதாசன் அரிவாளுடன் சென்று தூங்கி கொண்டிருந்த கவிபாலனை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது.
இதில் படுகாயம் அடைந்த கவிபாலன் ரத்த வெள்ளத்தில் துடி, துடித்து சம்பவ இடத்திலேயே பலியானார். 
கைது
இதுகுறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கவிபாலன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளி கவிதாசனை கைது செய்தனர். 
குடும்ப தகராறில் அண்ணனை தம்பி வெட்டிக்கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
1 More update

Next Story