மாவட்ட செய்திகள்

புதிதாக 9 பேருக்கு கொரோனா தொற்று + "||" + Corona

புதிதாக 9 பேருக்கு கொரோனா தொற்று

புதிதாக 9 பேருக்கு கொரோனா தொற்று
புதிதாக 9 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கரூர்
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை குறைந்து வந்தது. இதனால் தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் கரூர் மாவட்டத்தில் சில மாதங்களாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள பட்டியலில் கரூர் மாவட்டத்தில் புதிதாக 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி சக்திநகரை சேர்ந்த 35 வயது ஆண், வாங்கப்பாளையத்தை சேர்ந்த 56 வயது ஆண், பஞ்சப்பட்டியை சேர்ந்த 7 வயது சிறுமி, காமராஜபுரத்தை சேர்ந்த 40 வயது ஆண், எல்.ஜி.பி. நகரை சேர்ந்த 9 வயது சிறுமி, வடக்கு காந்திகிராமத்தை சேர்ந்த 54 வயது ஆண், தெற்கு காந்திகிராமத்தை சேர்ந்த 75 வயது மூதாட்டி, ஆண்டாங்கோவிலை சேர்ந்த 50 வயது ஆண், செல்லாண்டிபட்டியை சேர்ந்த 58 வயது ஆண் உள்ளிட்ட 9 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கரூர் காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. 13 பேருக்கு கொரோனா உறுதி
13 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது
2. கொரோனா பரவல் எதிரொலி: மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ்வர்தன், உயர்நிலை அமைச்சர்கள் குழுவுடன் நாளை ஆலோசனை
கொரோனா பரவல் எதிரொலியால், மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ்வர்தன், உயர்நிலை அமைச்சர்கள் குழுவுடன் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.
3. கொரோனாவால் ஒரு கிராமமே தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே கொரோனா தொற்று காரணமாக ஒரு கிராமமே தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
4. “கொரோனா 2வது அலை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” - தொண்டர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள்
பொதுமக்களுக்கு கொரோனா 2வது அலை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தொண்டர்களிடம் திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
5. டைரக்டருக்கு கொரோனா
தெலுங்கில் அர்த்தங்கி, ஸ்ரீ கிரிஷ்ணா, ராஜன்னா, ஸ்ரீ வள்ளி ஆகிய படங்களை இயக்கியவர் விஜயேந்திர பிரசாத். பாகுபலி படத்துக்கு திரைக்கதை எழுதி பிரபலமானார்.