மாவட்ட செய்திகள்

வாலிபர் கொலை வழக்கில் 2 பேர் கைது + "||" + 2 arrested in Valipar murder case

வாலிபர் கொலை வழக்கில் 2 பேர் கைது

வாலிபர் கொலை வழக்கில் 2 பேர் கைது
மூங்கில்துறைப்பட்டு அருகே வாலிபர் கொலை வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மூங்கில்துறைப்பட்டு, 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தாலுகா மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள மங்களம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி மகன் அஜித்(வயது 26). இவரும் இவரது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த லட்சுமணன் மகன் சஞ்சீவிகாந்தி, திருவண்ணாமலை மாவட்டம் கண்டியாங்குப்பம் பகுதியை சேர்ந்த குப்புசாமி மகன் சின்னராஜா ஆகியோரும் அருளம்பாடி முஸ்குந்தா நதி அருகே உள்ள ஒரு கோவில் பின்பகுதியில் அமர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. 
அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் அஜித் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மூங்கில்துறைப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் வாங்கிய கடனை திருப்பி கேட்டது தொடர்பாக அஜித்தை சின்னராஜா, சஞ்சீவிகாந்தி ஆகியோர் கொலை செய்தது தெரிந்தது. இதையடுத்து சின்னராஜா, சஞ்சீவிகாந்தி ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Tags :

தொடர்புடைய செய்திகள்

1. முதியவர் கைது
மதுரையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவர் கைது செய்யப்பட்டார்.
2. அரசு பஸ் டிரைவரை தாக்கிய வாலிபர் கைது
விருதுநகரில் அரசு பஸ் டிரைவரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
3. அறந்தாங்கி அருகே வாக்குப்பதிவு எந்திரத்தை உடைத்தவர் கைது
வாக்குப்பதிவு எந்திரத்தை உடைத்தவர் கைது செய்யப்பட்டார்.
4. மதுவிற்ற 2 பேர் கைது
சாத்தூரில் மது விற்ற 2 பேரை போலீசார் ைகது செய்தனர்.
5. மதுபாட்டில்களுடன் பெண் கைது
சேடபட்டி அருகே மதுபாட்டில்களுடன் பெண் கைது செய்யப்பட்டார்.