செங்கல்பட்டு மாவட்டத்தில் அசூர வேகத்தில் உயர்வு: கொரோனா தொற்றால் ஒரே நாளில் 615 பேர் பாதிப்பு; 2 பேர் சாவு


செங்கல்பட்டு மாவட்டத்தில் அசூர வேகத்தில் உயர்வு: கொரோனா தொற்றால் ஒரே நாளில் 615 பேர் பாதிப்பு; 2 பேர் சாவு
x
தினத்தந்தி 11 April 2021 4:50 AM GMT (Updated: 11 April 2021 4:50 AM GMT)

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று அசூர வேகத்தில் உயர்ந்து வருவதன் பலனாக நேற்று ஒரே நாளில் 615 பேர் பாதிப்பு பாதிக்கப்பட்டனர்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 615 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 60 ஆயிரத்து 122 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 55 ஆயிரத்து 863 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சைப் பலனின்றி 2 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 843 ஆக உயர்ந்தது. 3416 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சீபுரம்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 181 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 31 ஆயிரத்து 720 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 30 ஆயிரத்து 360 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சைப் பலனின்றி 2 பேர் உயிரிழந்தனர். இதனால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 467 உயர்ந்துள்ளது. 893 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 212 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரையில் மாவட்டம் முழுவதும் 47 ஆயிரத்து 894 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 45 ஆயிரத்து 743 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 1430 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரையில் 721 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்துள்ளனர்.


Next Story