காஞ்சீபுரத்தில் லோக் அதாலத் மூலம் ஒரே நாளில் 252 வழக்குகளில் முடிவு; தீர்வுத்தொகையாக ரூ.13 கோடி வழங்கப்பட்டது


காஞ்சீபுரத்தில் லோக் அதாலத் மூலம் ஒரே நாளில் 252 வழக்குகளில் முடிவு; தீர்வுத்தொகையாக ரூ.13 கோடி வழங்கப்பட்டது
x
தினத்தந்தி 11 April 2021 4:59 AM GMT (Updated: 11 April 2021 4:59 AM GMT)

காஞ்சீபுரத்தில் நடந்த (லோக் அதாலத்) எனும் மக்கள் நீதிமன்றத்தின் மூலம் ஒரே நாளில் 252 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, தீர்வுத்தொகையாக ரூ.13 கோடி வழங்கப்பட்டது.

லோக் அதாலத்

காஞ்சீபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள தொழிலாளர் நல நீதிமன்றத்தில் 5 அமர்வுகளாக மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) கூடியது. அப்போது நேற்று ஒரே நாளில் 817 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் 252 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.13 கோடியே 67 லட்சத்து 16 ஆயிரத்து 800 தீர்வுத்தொகையாகவும் வழங்கப்பட்டது.

விபத்தில் உயிரிழந்த கருணாகரன் என்பவரின் தாயார் தெய்வானையிடம் விபத்து காப்பீட்டுத் தொகையாக ரூ.12 லட்சத்துக்கான காசோலையை காஞ்சீபுரம் மாவட்ட நீதிபதி ஜெ.சந்திரன் வழங்கினார்.

தலைமை

இந்த லோக் அதாலத் எனும் மக்கள் நீதிமன்ற தொடக்க விழாவிற்கு மாவட்ட நீதிபதி ஜெ.சந்திரன் தலைமை வகித்தார். தொழிலாளர் நீதிமன்ற நீதிபதி சிவஞானம், கூடுதல் மாவட்ட நீதிபதி எம்.இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், நீதிபதியுமான பிரியா வரவேற்று பேசினார்.

தொடக்க விழாவில், நீதிபதிகள் சரவணக்குமார், செந்தில்குமார், திருமால் மற்றும் வக்கீல்கள் சங்க செயலாளர் சுப்பிரமணி, வக்கீல் அசோசியேசன் சங்க தலைவர் ரவிக்குமார் ஆகியோர் உட்பட நீதிபதிகள், வக்கீல்கள் பலரும் கலந்து கொண்டனர்.


Next Story