மாவட்ட செய்திகள்

உத்திரமேரூரில் அ.தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு + "||" + AIADMK in Uttiramerur Opening of the water tank

உத்திரமேரூரில் அ.தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

உத்திரமேரூரில் அ.தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
உத்திரமேரூர் ஒன்றிய அ.தி.மு.க. சார்பாக உத்திரமேரூர் பஸ் நிலையத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.

உத்திரமேரூர்,

உத்திரமேரூர் ஒன்றிய அ.தி.மு.க. சார்பாக உத்திரமேரூர் பஸ் நிலையத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, உத்திரமேரூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் கே.ஆர்.தர்மன், நகர செயலாளர் ஜெயவிஷ்ணு முன்னிலை வகித்தனர். காஞ்சீபுரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வி.சோமசுந்தரம் கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார்.

அப்போது, கூடியிருந்த பொதுமக்களுக்கு இளநீர், தர்பூசணி, மோர் ஆகியவை வழங்கப்பட்டது. தண்ணீர் பந்தல் திறப்பு விழாவில் அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத் கணேசன், முன்னாள் எம்.பி. காஞ்சி பன்னீர்செல்வம், ஒன்றிய செயலாளர்கள் பிரகாஷ் பாபு, அத்திவாக்கம் ரமேஷ், எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் கங்காதரன், துரை பாபு மற்றும் அ.தி.மு.க. தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பொதுமக்களுக்கு மாவட்ட செயலாளர் சோமசுந்தரம், அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத் கணேசன் ஆகியோர் முககவசங்களை இலவசமாக அளித்தனர். மேலும் பஸ்களில் சென்ற பொதுமக்களுக்கும், கடைவீதியில் இருந்த வியாபாரிகளுக்கும் முககவசங்களை அ.தி.மு.க.வினர் வழங்கினர்.


தொடர்புடைய செய்திகள்

1. ஓ.பன்னீர் செல்வம் எதிர்ப்புக்கிடையில் எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வானது எப்படி...?
எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது குறித்து அதிமுக-வின் டுவிட்டர் பக்கத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
2. தமிழக சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு
தமிழக சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.
3. பெரம்பலூர் தொகுதியை அ.தி.மு.க. இழக்க காரணம் என்ன?
தொடர்ந்து 2 முறை வெற்றி பெற்ற பெரம்பலூர் தொகுதியை அ.தி.மு.க. இழக்க நேரிட்ட காரணங்கள் குறித்து அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
4. கருத்துக்கணிப்புகளை தவிடு பொடியாக்குவோம்: தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க.தான் ஆட்சி அமைக்கும்; அமைச்சர் ஜெயக்குமார் உறுதி
தமிழகத்தில் கருத்துக்கணிப்புகளை தவிடுபொடியாக்கி அ.தி.மு.க. மீண்டும் ஆட்சி அமைக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
5. அ.தி.மு.க., கூட்டணி கட்சி வேட்பாளர்களுடன் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆலோசனை
அ.தி.மு.க., கூட்டணி கட்சி வேட்பாளர்களுடன் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆலோசனை