நீடாமங்கலம் பகுதியில் ஒரேநாளில் 11 பேருக்கு கொரோனா நோய் தடுப்பு பணிகள் தீவிரம்


நீடாமங்கலம் பகுதியில் ஒரேநாளில் 11 பேருக்கு கொரோனா நோய் தடுப்பு பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 13 April 2021 6:18 PM IST (Updated: 13 April 2021 6:18 PM IST)
t-max-icont-min-icon

நீடாமங்கலம் பகுதியில் ஒரேநாளில் 11 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இதனால் அப்பகுதியில் நோய் தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நீடாமங்கலம், 

திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

நீடாமங்கலம் பகுதியில் ஒரேநாளில் 11 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால்அவர்கள் திருவாரூர் அரசுமருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக நேற்று அனுமதிக்கப்பட்டு உள்ளனர். நீடாமங்கலம் பகுதியில் மீண்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஏற்கனவே 20-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வந்தனர்.

11 பேர்

இந்தநிலையில் சுகாதாரத்துறையினர் நடத்திய பரிசோதனையில் நீடாமங்கலம் பகுதியில் ஒரேகுடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கும், ராயல் சிட்டியில் ஒருவருக்கும், சித்தமல்லி, ஆதனூர், தேவங்குடி, வடுவூர்வடபாதி, கப்பலுடையான் ஆகிய பகுதிகளை

சேர்ந்த தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இது குறித்துதிருவாரூர் மாவட்ட கலெக்டர் சாந்தாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கலெக்டர் உத்தரவின் பேரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 11 பேரும் திருவாரூர் அரசுமருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக நேற்று அனுமதிக்கப்பட்டனர்.

80 பேருக்கு கொரோனா பரிசோதனை

மேலும் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுப்படி தாசில்தார் மணிமன்னன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராணிமுத்துலெட்சுமி, சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் சுகாதார செவிலியர்கள், கிராமசுகாதார செவிலியர்கள், தூய்மை காவலர்கள் சம்பவ இடத்துக்கு சென்று நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டனர்.

நீடாமங்கலம் பகுதியில் நேற்று மட்டும் 80 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story