கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் கட்டிட பொறியாளர்கள் சங்க கூட்டத்தில் வலியுறுத்தல்


கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் கட்டிட பொறியாளர்கள் சங்க கூட்டத்தில் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 13 April 2021 2:23 PM GMT (Updated: 13 April 2021 2:23 PM GMT)

கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்று கட்டிட பொறியாளர்கள் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

நாகப்பட்டினம், 

நாகையில் கட்டிட பொறியாளர்கள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க தலைவர் செல்வகுமார் தலைமை தாங்கினார். செயலாளர் ராமச்சந்திரன், பொருளாளர் ரகுராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில தலைவர் சரவணன் கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:-

மாநில அளவில் என்ஜினீயர்ஸ் கவுன்சிலிங் அமைக்க தமிழக அரசை வலியுறுத்துவது. கம்பிகள் உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.

அனைத்து கட்டுமான பணிகளும்

அங்கீகரிக்கப்பட்ட சிவில் என்ஜினீயர்ஸ் மேற்பார்வையில் அனைத்து கட்டுமான பணிகளும் நடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக 2022-23-ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். முடிவில் முன்னாள் தலைவர் சிங்காரவேலு நன்றி கூறினார்.

Next Story