தஞ்சை மருத்துவ கல்லூரி எதிரே அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் பலி போலீசார் விசாரணை


தஞ்சை மருத்துவ கல்லூரி எதிரே அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் பலி போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 13 April 2021 10:13 PM IST (Updated: 13 April 2021 10:13 PM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மருத்துவ கல்லூரி எதிரே அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தஞ்சாவூர், 

தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல் கேட் எதிரே மசூதி உள்ளது. இதனருகே 50 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் அமர்ந்திருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அந்த பெண் மீது மோதியது.

மோதிய வேகத்தில் வாகனம் நிற்காமல் அந்த பெண்ணை சில அடி தூரம் வரை இழுத்துச் சென்றது. பின்னர் அந்த வாகனம் அங்கிருந்து சென்று விட்டது. இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அந்த பெண்ணை அருகில் இருந்தவர்கள் காப்பாற்றி சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பெண் பலி

அங்கு அந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக இறந்தார். அந்த பெண் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தஞ்சை நகர போக்குவரத்து விசாரணை பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமதாஸ், சப்- இன்ஸ்பெக்டர் தங்கராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story