ரமலான் நோன்பு திறப்பு


ரமலான் நோன்பு திறப்பு
x
தினத்தந்தி 14 April 2021 6:25 PM GMT (Updated: 14 April 2021 6:25 PM GMT)

முஸ்லிம்கள் சமூக இடைவெளியை பின்பற்றி ரமலான் நோன்பினை திறந்தனர்.

பெரம்பலூர், ஏப்.15-
முஸ்லிம்கள் ரமலான் மாதத்தின் 30 நாட்களிலும் நோன்பிருந்து ஐந்து வேளை தொழுகை செய்வார்கள். மேலும் வானில் தோன்றும் பிறையை வைத்து ரம்ஜானுக்கு நோன்பு தொடங்கப்படுவது வழக்கம். அவ்வாறு பிறை தென்படாத சூழலில் ரமலான் மாதத்தின் முதல் தேதியில் நோன்பை தொடங்குவார்கள். இந்தாண்டு தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் ரமலான் நோன்பு தொடங்குவதற்கான பிறை ஏதும் நேற்று முன்தினம் வரை தென்படவில்லை.
எனவே ரமலான் மாதத்தின் முதல் தேதியில் நோன்பு தொடங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்று ரமலான் நோன்பு தொடங்கப்பட்டது கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கினால் வீட்டிலேயே முஸ்லிம்கள் ரமலான் நோன்பினை கடைபிடித்தனர். இந்த ஆண்டும் கொரோனா அச்சுறுத்தலால் வீட்டிலேயே ரமலான் நோன்பினை திறக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி நேற்று மாலை பெரம்பலூர் மாவட்டத்தில் பெரும்பாலான முஸ்லிம்கள் வீட்டிலேயே ரமலான் நோன்பினை திறந்தனர். மேலும் பள்ளிவாசல்களில் கூட்டமின்றி முஸ்லிம்கள் சமூக இடைவெளியை பின்பற்றி ரமலான் நோன்பினை திறந்தனர். அடுத்த மாதம் (மே) 14-ந் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story