காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை ஆலோசனை கூட்டம்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் குன்றத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 42 ஊராட்சிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் படப்பையில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் நடந்தது.
இதற்கு காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) மணிமாறன் தலைமை தாங்கினார். குன்றத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வேல்முருகன், முத்துசுந்தரம், வட்டார மருத்துவ அலுவலர் ஜெய்சங்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட 42 ஊராட்சி செயலர்களுக்கும் ஊராட்சிகளில் கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடுப்பு அமைத்து அந்த பகுதிகளில் மக்கள் செல்லாதவாறு எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும். ஊராட்சி பகுதிகளில் ஊராட்சி செயலர் மற்றும் மகளிர் குழுவின் மூலம் வார்டு வாரியாக வீடு வீடாக சென்று வெப்பநிலை கருவி மூலம் பொதுமக்களுக்கு பரிசோதனை செய்து கொரோனா அறிகுறி இருந்தால் உடனடியாக அவர்களை சிகிச்சைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதில் சுகாதார மேற்பார்வையாளர் சவுந்தர்ராஜன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஏழுமலை, அலுவலக மேலாளர் பழனி, ஊராட்சி செயலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story