ஆறுமுகநேரி போலீஸ் நிலையத்தில் போலீசாருக்கு கொரோனா பரிசோதனை
ஆறுமுகநேரி போலீஸ் நிலையத்தில் போலீசாருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
ஆறுமுகநேரி, ஏப்:
ஆறுமுகநேரி போலீஸ் நிலையத்தில் 34 வயதுடைய போலீஸ்காரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு பணியாற்றும் மற்ற போலீசாருக்கு நேற்று காலை கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. ஆறுமுகநேரி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் டாக்டர் சீனிவாசன் மற்றும் சுகாதார ஆய்வாளர் மகாராஜன், மருத்துவமனை ஊழியர்கள் பரிசோதனை செய்தனர். இதில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் 2 பெண் போலீசார் உள்பட மொத்தம் 26 பேர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர். மேலும் அங்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இதில் ஆறுமுகநேரி ஆதவா சமூக அறக்கட்டளையின் நிர்வாகி பால குமரேசன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயக்குமார், முத்துகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story