தடுப்பூசி செலுத்தாத வியாபாரிகளின் விவரங்கள் சேகரிப்பு
ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் தடுப்பூசி செலுத்தாத வியாபாரிகளின் விவரங்கள் சேகரிப்பு
ஊட்டி
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவல் 2.7 சதவீதமாக உள்ளது. தினமும் 1,200 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்க போதுமான கருவிகள் வரவழைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் 1,300-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இங்கு வியாபாரிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடந்தது. இதில் சிலர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
தடுப்பூசி செலுத்தாதவர்கள் விவரங்களை சேகரித்து, அவர்களுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து நகராட்சி சுகாதார அதிகாரிகள் மார்க்கெட்டில் உள்ள கடைகளில் வியாபாரிகளிடம் தடுப்பூசி செலுத்தி உள்ளீர்களா? என்று கேட்டறிந்து விவரங்களை சேகரித்து வருகின்றனர்.
தடுப்பூசி செலுத்தவில்லை என்றால் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் செலுத்திக்கொள்ள வேண்டும். இதன் மூலம் தொற்று பரவலை தடுக்கலாம் என்றனர்.
Related Tags :
Next Story