கைக்குழந்தையுடன் தம்பதி தர்ணா


கைக்குழந்தையுடன் தம்பதி தர்ணா
x
தினத்தந்தி 15 April 2021 4:57 PM GMT (Updated: 15 April 2021 4:57 PM GMT)

கலெக்டர் அலுவலகத்தில் கைக்குழந்தையுடன் தம்பதி தர்ணாவில் ஈடுபட்டனா்.

விழுப்புரம், 

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள மேட்டுக்குப்பம் கிராமத்தை சேர்ந்த ஏழுமலைக்கும், பாவந்தூர் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்திக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் ஏழுமலையை தாக்கி கிருஷ்ணமூர்த்தி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து புகார் கொடுத்தும் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. புகாரின்படி நடவடிக்கை எடுக்கக்கோரி ஏழுமலை, தனது மனைவி மற்றும் கைக்குழந்தையுடன் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டார். இதை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பார்த்து, இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் மனு கொடுக்குமாறு அறிவுறுத்தினர். இதையடுத்து ஏழுமலை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணனிடம் மனு கொடுத்தார். அதை பெற்ற அவர், விசாரிப்பதாக கூறினார். 

Next Story