வாகன சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.2½ கோடி, வங்கி அதிகாரிகளிடம் ஒப்படைப்பு
வாகன சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.2½ கோடி, வங்கி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
பாபநாசம்,
தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே பூண்டி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பறக்கும் படை அதிகாரி செல்வகுமாரி மற்றும் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தஞ்சையில் இருந்து கும்பகோணம் நோக்கி சென்ற வேனை நிறுத்தி சோதனை செய்தபோது, தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின் மூலமாக ரூ.2 கோடியே 50 லட்சம் எடுத்து செல்லப்பட்டது தெரியவந்தது. ஆனால் அந்த பணத்துக்குரிய ஆவணங்கள் ஏதும் இல்லை.
வங்கி அதிகாரிகளிடம் ஒப்படைப்பு
இதனால் அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து பாபநாசம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மதியழகன், தாசில்தார் முருகவேல் ஆகியோரிடம் ஒப்படைத்து இருந்தனர்.
தற்போது தேர்தல் முடிந்து விட்ட நிலையில் வங்கி அதிகாரிகள் பணத்துக்குரிய ஆவணங்களை அதிகாரிகளிடம் காட்டினர். இதையடுத்து ரூ.2 கோடியே 50 லட்சம், தாசில்தார் முன்னிலையில் வங்கி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
Related Tags :
Next Story