ஆபத்தான மின்கம்பத்தை மாற்ற பொதுமக்கள் கோரிக்கை


ஆபத்தான மின்கம்பத்தை மாற்ற பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 15 April 2021 5:53 PM GMT (Updated: 15 April 2021 5:53 PM GMT)

ஆபத்தான மின்கம்பத்தை மாற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நச்சலூர்
குளித்தலை ஒன்றியம் பொய்யாமணி ஊராட்சி அம்பேத்கர் நகரில் ஒரு மின்கம்பம் சாய்ந்து கீழே விழும் நிலையில் உள்ளது. இந்த மின்கம்பத்தின் நடுப்பகுதி சிமெண்டு பூச்சுக்கள் பெயந்து கம்பிகள் வெளியே தெரிகின்றது. அதனால் இப்ப விழுமோ?எப்ப விழுமோ? என்ற நிலையில் உள்ளது. இந்த மின் கம்பம் இருக்கும் பகுதியில் குழந்தைகள் மற்றும் முதியோர் பொது மக்கள் மிகவும் அச்சத்தில் அவ்வழியாக தினமும் சென்று வருகின்றனர். மின்கம்பம் சாய்ந்து விழுந்தால் உயிர் சேதத்தை ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுத்து சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி புதிய மின் கம்பம் அமைத்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story