மாவட்ட செய்திகள்

கிருஷ்ணராயபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 8½ பவுன் நகைகள் திருட்டு + "||" + Theft of jewelry

கிருஷ்ணராயபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 8½ பவுன் நகைகள் திருட்டு

கிருஷ்ணராயபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 8½ பவுன் நகைகள் திருட்டு
கிருஷ்ணராயபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கிருஷ்ணராயபுரம்
8½ பவுன் நகைகள் திருட்டு
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள ஆர்.எஸ்.வீரராக்கியத்தை சேர்ந்தவர் சேதுரத்தினம். இவரது மகன் அருண் (வயது 32). இவர் கடந்த 12-ந்தேதி தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்று விட்டார். பின்னர் மறுநாள் 13-ந்தேதி காலை அருண் வீட்டிற்கு வந்து பார்த்தார். 
அப்போது, அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அருண் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது அவர் பீரோவில் வைத்திருந்த ரூ.85 ஆயிரம் மதிப்பிலான 8½ பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அருண் மாயனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். 
போலீசார் வலைவீச்சு
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் கைரேகைகளை பதிவு செய்தனர். இந்த திருட்டு சம்பவம் குறித்து அருண் மாயனூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். 
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. புதுக்கோட்டையில் வீடு புகுந்து 8½ பவுன் நகைகள் திருட்டு
புதுக்கோட்டையில் வீடு புகுந்து 8½ பவுன் நகைகளை திருடிய நபர்களை தேடி வருகின்றனர்.
2. வீட்டின் ஜன்னல் கம்பிகளை அறுத்து 35 பவுன் நகைகள் திருட்டு
லப்பைக்குடிக்காட்டில் பட்டப்பகலில் வீட்டின் ஜன்னல் கம்பிகளை அறுத்து 35 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
3. பெரியபாளையம் அருகே பெண் வீட்டில் ரூ.6 லட்சம் நகைகள் திருட்டு; 2 பேர் கைது
பெரியபாளையம் அருகே பெண்ணின் வீட்டில் இருந்த ரூ.6 லட்சம் மதிப்புள்ள 22 பவுன் தங்க நகைகள் திருடியதாக உறவினர் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
4. வீட்டில் 15 பவுன் நகைகள் திருட்டு
வீட்டில் இருந்து 15 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.