300 பேருக்கு கொரோனா தடுப்பூசி


300 பேருக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 15 April 2021 6:36 PM GMT (Updated: 15 April 2021 6:36 PM GMT)

நீடாமங்கலம் வட்டாரத்தில் ஒரேநாளில் 300 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.

நீடாமங்கலம்;
நீடாமங்கலம் வட்டாரத்தில் ஒரேநாளில்  300 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. 
கொரோனா தடுப்பூசி
கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா தடுப்பூசி போடும் பணியும் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. நீடாமங்கலம் தாசில்தார் அலுவலகத்தில் கோவில்வெண்ணி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது. தாசில்தார் மணிமன்னன் தலைமையில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்ராணிமுத்துலெட்சுமி முன்னிலையில் நடந்த இந்த முகாமில் 80 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
மேல்நிலைப்பள்ளி
முகாமில் கோவில்வெண்ணி அரசு ஆரம்பசுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதாரத்துறையினர், வர்த்தகர் சங்கத்தினர், உதவும் மனங்கள் அமைப்பினர் பணியாற்றினர். நீடாமங்கலம் மேல்நிலைப்பள்ளியில் 20பேருக்கும், கோவில்வெண்ணியில் 10 பேருக்கும், ராயபுரத்தில் 30 பேருக்கும், பொதக்குடியில் 30 பேருக்கும், கப்பல் உடையானில் 40 பேருக்கும், வடுவூரில் 30 பேருக்கு, தளிக்கோட்டையில் 20 பேருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. 
நீடாமங்கலம் அரசு மருத்துவமனையில் மருத்துவ அதிகாரி டாக்டர் தினேஷ் தலைமையில் செவிலியர்கள் நேற்று 40 பேருக்கு கொரோனா தடுப்பூசி போட்டனர். தொடர்ந்து நீடாமங்கலம் அரசு மருத்துவமனையில் காலை 9 மணிமுதல் மதியம் 1 மணிவரை கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெறும் என மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story