‘மண்டேலா’ திரைப்படத்தை தடை செய்யவேண்டும் முடி திருத்தும் தொழிலாளர் நல சங்கம் தீர்மானம்


‘மண்டேலா’ திரைப்படத்தை தடை செய்யவேண்டும் முடி திருத்தும் தொழிலாளர் நல சங்கம் தீர்மானம்
x
தினத்தந்தி 15 April 2021 7:13 PM GMT (Updated: 15 April 2021 7:13 PM GMT)

‘மண்டேலா’ திரைப்படத்தை தடை செய்யவேண்டும் என்று முடி திருத்தும் தொழிலாளர் நல சங்கம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஸ்ரீரங்கம், 
தமிழ்நாடு மருத்துவர் சமூக நல சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர் நல சங்கம் ஆலோசனை கூட்டம் ஸ்ரீரங்கத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு ஸ்ரீரங்கம் நகர தலைவர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். செயலாளர் ராஜலிங்கம், ஆலோசகர் சுரேஷ், இளைஞரணி செயலாளர் மாரிமுத்து ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில், மருத்துவ சமூக மக்கள், முடிதிருத்தும் தொழிலாளர்களின் மனதை புண்படுத்தும் வகையில் மண்டேலா திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த மண்டேலா திரைப்படத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்களை மிகவும் இழிவு படுத்தும் வகையில் காட்சிகள் உள்ளன. ஆகவே இந்த திரைப்படத்தை முற்றிலும் தடை செய்ய வேண்டும். இதை ஒளிபரப்பிய தனியார் தொலைக்காட்சி நிறுவனம், பட இயக்குனர், தயாரிப்பாளர் ஆகியோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுவிடம் புகார் மனு கொடுக்கப்பது என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக அமைப்பாளர் ஜீவரத்தினம் வரவேற்றார். முடிவில் பொருளாளர் சங்கர் நன்றி கூறினார்.

Next Story