சென்னிமலை முருகன் கோவிலில் பக்தர்கள் ரூ.60¼ லட்சம் உண்டியல் காணிக்கை


சென்னிமலை முருகன் கோவிலில் பக்தர்கள் ரூ.60¼ லட்சம் உண்டியல் காணிக்கை
x
தினத்தந்தி 16 April 2021 4:27 AM IST (Updated: 16 April 2021 4:27 AM IST)
t-max-icont-min-icon

சென்னிமலை முருகன் கோவிலில் பக்தர்கள் ரூ.60¼ லட்சம் உண்டியல் காணிக்கை செலுத்தி இருந்தனர்.

சென்னிமலை
சென்னிமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் உண்டியல்களை திறந்து காணிக்கை எண்ணும் பணி நேற்று நடந்தது. பவானி சங்கமேஸ்வரர் கோவில் உதவி ஆணையர் வே.சபர்மதி தலைமையில், ஈரோடு உதவி ஆணையர் பிரதிநிதி சந்திரசேகரன், பெருந்துறை கோவில் ஆய்வாளர் தேன்மொழி, சென்னிமலை கோவில் செயல் அலுவலர் அருள்குமார் ஆகியோர் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டன. இந்த பணியில் கூட்டுறவு வங்கி மற்றும் கூட்டுறவு சங்க பணியாளர்கள், கோவில் பணியாளர்கள், பாரதியார் குழந்தைகள் காப்பக மாணவ- மாணவிகள், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். 
இதில் நிரந்தர உண்டியலில் ரூ. 56 லட்சத்து 40 ஆயிரத்து 325-ம், திருப்பணி உண்டியலில் ரூ.3 லட்சத்து 95 ஆயிரத்து 689-ம் என மொத்தம் ரூ.60 லட்சத்து 36 ஆயிரத்து 14-ஐ பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். மேலும் 145 கிராம் தங்கமும், 1,968 கிராம் வெள்ளியும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

Next Story