உள்ளிருப்பு பயிற்சி தற்காலிகமாக நிறுத்தம் வெளிநாட்டில் மருத்துவம் படித்த மாணவர்கள் சென்னையில் ஆர்ப்பாட்டம்
பல மாணவர்கள் எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்புக்கு இணையான மருத்துவ படிப்புகளை படித்து வருகின்றனர்.
சென்னை,
தமிழகத்தில் இருந்து ரஷியா, சீனா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் பல மாணவர்கள் எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்புக்கு இணையான மருத்துவ படிப்புகளை படித்து வருகின்றனர். இவ்வாறு அங்கு படிப்பு முடிந்து வரும் தமிழக மாணவர்கள், இந்தியாவில் நடைபெறும் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் மருத்துவ கவுன்சில் மூலம் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ளிருப்பு பயிற்சி மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு பயிற்சி முடித்த மாணவர்களுக்கு டாக்டருக்கான அடையாள அட்டை வழங்கப்படும்.
இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த 1-ந்தேதி முதல் வெளிநாடுகளில் படித்து முடித்த மருத்துவ மாணவர்களுக்கான உள்ளிருப்பு பயிற்சியை தமிழக மருத்துவ கவுன்சில் தற்காலிகமாக நிறுத்தி உள்ளது. இதனால் தற்போது உள்ளிருப்பு பயிற்சி மேற்கொள்வதற்காக காத்திருக்கும் வெளிநாட்டில் மருத்துவம் படித்த தமிழக மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த முடிவை எதிர்த்து சில மாணவர்கள் தங்களது பெற்றோருடன் நேற்று சென்னை அமைந்தகரையில் உள்ள தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story