மாவட்ட செய்திகள்

போலீஸ் நிலையத்தில் கவர்ச்சி நடிகை மாயா பரபரப்பு புகார் + "||" + At the police station Sexy actress Maya complains of excitement

போலீஸ் நிலையத்தில் கவர்ச்சி நடிகை மாயா பரபரப்பு புகார்

போலீஸ் நிலையத்தில் கவர்ச்சி நடிகை மாயா பரபரப்பு புகார்
விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் நடிகை மாயா பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார்.
பூந்தமல்லி, 

சென்னை விருகம்பாக்கம் அடுத்த சாலிகிராமம், புஷ்பா காலனி பகுதியில் வசித்து வருபவர் கவர்ச்சி நடிகை மாயா (வயது 55). இவருக்கு விக்கி (40) என்ற மகனும், 20 வயதில் மகளும் உள்ளனர். மகனுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக மாயா, தனது மகளோடு தனியாக வசித்து வருகிறார்.

இந்தநிலையில் விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் நடிகை மாயா பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அதில் அவர், “விக்கி சிலரிடம் பணம் வாங்கி இருப்பதாக தெரிகிறது. அந்த பணத்தை அவர் திருப்பி தராததால் பணம் கொடுத்தவர்கள் எனது வீட்டுக்கு வந்து, எனது மகளை கையை பிடித்து இழுத்து தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியதுடன், விக்கி வாங்கிய தொகையை நான் தான் தரவேண்டும் என்றும் மிரட்டி சென்றதாக” கூறி இருந்தார்.

தனது மகளை வேண்டுமென்றே தரக்குறைவாக பேசியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புவதாகவும் நடிகை மாயா தெரிவித்தார்.